Wednesday, November 4, 2015

அஜித் குமார் - விழாக்களில் கலந்து கொள்ளாததன் காரணம்

அது 1995 ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த அந்த சினிமா விருது வாங்குவதற்கு மேடையில் ஏற்கிறார் அந்த நடிகர். 
அந்த நடிகன் அன்று பிரபலமான நடிகன் அல்ல வெற்றிக்காக காத்திருக்கும் வளர்ந்து வரும் ஒரு சாதாரணமான நடிகன். 
அவருக்கு விருது வழங்க மேடையில் ஏறியது. ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நம்பர் 1 நடிகை..
விருதை குடுத்துட்டு ரசிகர்கள் அந்த நடிகையை மேடையில் ஒரு பாடலுக்கு நடனமாட கேட்கிறார்கள். 
உடனே நிகழ்ச்சி அறிவிப்பாளர் நடிகருடன் சேர்ந்து நடனம் ஆடும்படி கேட்கிறார்கள். அந்த நடிகையும் அதற்கு ஒப்புக் கொண்டு வந்து நடனமாட தயாராகிறார். 
ஆனால் இதுவரை முன்வரிசையில் இருந்து நிகழ்ச்சியை பார்த்திட்டு இருந்த நடிகையின் அம்மா திடீரென மேடையில் ஏறி அந்த நடிகையை தர தர வென இழுத்து வந்துவிடுகிறார்.
என் மகள் ஒரு மிக பெரிய ஸ்டார்.அவ கூட நடனமாட மட்டும் இல்ல அவள் பக்கத்தில் நிற்கக்கூட உனக்கு தகுதி இல்லை என்று ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன் அந்த நடிகனை அவமானப்படுத்திகிறார். 
அவமானத்தை பொறுத்து கொண்ட அந்த நடிகன் அந்த இடத்தை விட்டு போய்விடுகிறார். 
காலம் மாறுகிறது.
கூடவே நிலைமையும் மாறுகிறது. 
அந்த நடிகையின் மார்க்கெட் அதால பள்ளத்தில் விழுந்தது. 
ஆனால் அந்த நடிகனோ தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். 
2002 :இல் அந்த நடிகன் நடித்த படம் இரண்டு ஹீரோயின்.அந்த படத்தில் நடிகைக்கு வாய்ப்பு கொடுத்து அந்த படமும் சூப்பர் ஹீட் ஆகிறது. 
அந்த படத்தின் பெயர்: வில்லன்.
அந்த நடிகையின் பெயர் :மீனா
அந்த நடிகனை அவமானப்படுத்தியாவர் மீனாவின் அம்மா. 
அன்று ஆயிரக்கணக்கான மக்கள் முன் அவமானபடுத்தப்பட்ட நடிகன். வேற யாரும் இல்லை. 
இன்று கோடிக்கணக்கான ரசிகர்களின் தனக்கென வைத்துள்ள. தல அஜித் குமார் அவர்கள் தான். 
நாம் அனைவருக்கும் தெரியும் இன்னும் அவர் திரைப்பட விழாவில் அதிகம் கலந்து கொள்ளவில்லை.
அதற்கு இதுவும் ஒரு காரணம்.

No comments:

Post a Comment