Friday, August 5, 2016

Awaiting for my sweet little baby !!!

ன்று மளமளவென வளர்ந்துவிட்ட தொழில்நுட்பங்கள் நமக்கு அதிக பயன்பாடுகளைத் தந்தாலும், ஏனோ மனதிற்கு ஆழ்ந்த மகிழ்ச்சியை தருவதில்லை. எதுவுமே அளவுக்கு மீறிப் போகும்போது ரசிக்க முடியாமல் போய்விடுகிறது. ஐம்பது பைசா இன்லாண்ட் கடிதங்களும், 25 பைசா போஸ்டு கார்டும் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை இன்றைய மொபைல் போன்களும், பேஸ்புக்கும் வெளிப்படுத்துவதில்லை.

தொழில்நுட்ப சாதனங்கள் நம்மை மெல்ல மெல்ல சுயமாக பல காரியங்களைச் செய்ய இயலாதவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு திருமணம், புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழை நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பிவிட்டால் போதும், நிகழ்ச்சி நடைபெறும் நாளில் அனைவரும் ஆஜராகிவிடுவார்கள். ஆனால் இன்றைய நிலைமையே வேறு. நேரில் பத்திரிகை வைத்துவிட்டு வந்தாலும் மீண்டும் ஒருமுறை குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் போன் செய்து அழைக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

சென்னையிலிருந்து திருச்சிக்கு நண்பரின் விஷேசத்திற்கு செல்ல வேண்டும் எனில் பத்திரிகை கையில் கிடைத்ததும் ஒருமுறை போன் செய்து எப்படி வரவேண்டும் என விசாரித்துவிட்டு, பிறகு விஷேச தினத்தில் "நான் பஸ் ஸ்டாண்ட் வந்துட்டேன் இங்கிருந்து எப்படி வருவது?", "விவேகானந்தர் நான்காவது தெருவுக்கு வந்துட்டேன்.. ஏழாவது தெருவுக்கு எப்படி வருவது?" என நிகழ்ச்சி நடத்தும் நண்பரின் மொபைல் போனுக்கு ஓயாமல் அலைபேசும் நபர்களும் இருக்கிறார்கள். ஏண்டா இவனைக் கூப்பிட்டோம் என நினைக்கும் அளவுக்கு எரிச்சலூட்டுகிறார்கள்.

முன்பெல்லாம் கடிதங்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலங்களில் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் சந்திக்க வேண்டும் என நண்பருக்கு ஒரு கடிதம் போட்டால் போதும். அந்த நேரத்தில், அந்த இடத்தில் தவறாமல் ஆஜராகிவிடுவார். 

இன்றைய தேதியில் பிரசவ வார்டில் மனைவி இருக்கும் போது கூட, " Awaiting for my sweet little baby " என டுவிட்டரில் தகவல் பரிமாறி, பிரசவமான குழந்தையை உடனே புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றுகிறார்கள். குழந்தை பிறந்ததை விட, அந்த செய்தியை பதிவேற்றம் செய்வதில் அதிக மகிழ்ச்சியடைகிறார்களோ என்று தோன்றுமளவுக்கு தொழில்நுட்ப அடிமைகளாகிவிட்டனர்.

ஆனால் அன்று, குழந்தை பிறப்புக்காக அம்மா வீடு வந்த மனைவிக்கு குழந்தை பிறந்த தகவல் கடிதம் மூலம் மூன்று நாட்கள் கழித்து தான் தெரிய வரும். அதன்பிறகு விடுமுறை எடுத்துக் கொண்டு தனக்கு பிறந்த மகனை / மகளைப் பார்க்க ஊருக்கு சென்றவர்கள் ஏராளம். தனது மகன் எப்படி இருப்பான் என நினைத்துக் கொண்டே பயணித்து, மனம் நிறைய  மகனை அள்ளி முத்தமிடும் தருணத்தின் மகத்துவத்தை அனுபவித்தவர்களைக் கேட்டால் தெரியும்.  

ஏதேனும் துக்கம் நிகழ்ந்துவிட்டால் ஊருக்கு ஒருவர் தகவல் சொல்ல கிளம்பி போவார். அவர் போகும் ஊரில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தகவல் சொல்ல தேவையில்லை. அந்த ஊரில் ஒருவருக்கு தகவல் சொன்னால்கூட போதும். அவர்கள் மூலம் தகவல் பரவி அனைவரும் வந்து சேர்ந்துவிடுவர். ஆனால் இப்போது அப்படி இல்லை.. சில குடும்பங்களில் மாமா, அத்தை, அத்தை மகன், அத்தை மகள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக போன் செய்து தகவல் சொல்ல வேண்டியுள்ளது. இல்லையெனில் எனக்கு ஏன்  சொல்லவில்லை நான் முக்கியமான ஆளில்லையா என்ற சண்டைகள் ஏராளமாக நடப்பதைக் காணமுடிகிறது.

ஊரிலிருக்கும் தாத்தாவுக்கு போட்ட கடிதத்திற்கு பதில் கடிதம் வந்த அன்று அதை பிரித்து படிப்பதற்குள் மனதிற்குள் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. நேரத்திற்கு சாப்பிடு, கவனமாக பள்ளிக்கூடத்துக்கு போ, வெயிலில் அதிகம் அலையாதே, காலாண்டு விடுமுறைக்கு ஊருக்கு வா என ஒவ்வொரு வார்த்தையிலும் தாத்தாவின் பாசமும், அக்கறையும் இருக்கும். கடிதங்களின் ஓரத்து மடுப்புகளில் கூட தாத்தா, பாட்டியின் அன்பு ஒட்டிக் கொண்டிருக்கும். 

கடிதப் போக்குவரத்தில் 'இப்டிக்கு உங்கல் அன்புள்ள மகன்', 'இப்படிக்கு உங்க அன்புல்ல பேத்தி' என தப்பு தப்பாய் எழுதியிருந்தாலும், அதில் வார்த்தைக்கு வார்த்தை அன்பு நிறைந்திருக்கும். அவை பொக்கிஷம் போல் அவ்வப்போது எடுத்து எடுத்து படிக்கப்படுவதும் உண்டு. 

ஆயிரம் எஸ்.எம்.எஸ். மெசேஜ்கள் அனுப்பினாலும், அவை ஒரே ஒரு கடிதம் சொல்லிய அன்பை முழுமையாகப் பரிமாறிவிட முடியுமா?

'இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் !!

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!

யார் இவர் ?

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.குடும்பம்மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.மரங்கள் மட்டும் அல்ல

தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300௦௦ ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த 'முலாய் காடுகள்' !!சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார்.இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே முடிந்தது.

மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.

உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்...!!'மனிதருள் மாணிக்கம்' இவர்...! இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்...என்பதே இங்கே எனது வேண்டுகோள்.

இவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும் வரக்கூடும்...நண்பர்கள் விரும்பினால் தங்கள் தளங்களில் இவரை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்...

என்னை மன்னித்துவிடேன் அம்மா..!!

எழுத வார்த்தைகள் இல்லாமல் தொடங்குகிறேன்...!!

பருவம் வரை பக்குவமாய் வளர்த்து விட்டாயே
ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
உத்தமன் என் பிள்ளை என்று
விட்டு கொடுக்காமல் பேசுவாயே...

அம்மா..!! நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய் தட்டி சென்ற நாட்கள்..!!
செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு" போய்வாட என நீ சொல்ல
இந்த வயதில் கடைக்கு போவதா?.. என நான் சொன்னேன்..!!
இன்றோ..
இங்கே கண்ணுக்கு தெரியாத யாரோ ஒருவருக்காக ஓயாமல்
வேலை செய்கிறேன் அம்மா..!!
  
நெற்றி வியர்வை சிந்த பரிமாறும் உந்தன் கை பக்குவ உணவு
நான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.
இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!!
கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா
சூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல
பத்து நிமிஷமா..!, நான் வெளியல
சாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி கிளம்பிய தருணங்கள்..!!
இன்றோ..
இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு, சாப்பிடும் போதே கண்கள் களங்க
இன்று காரம் கொஞ்சம் அதிகம் போய்விட்டது என கடைக்காரர் சொல்ல..!!
எனக்கு மட்டும் தெரிந்தஉண்மை..!!
பாசமுடன் நீ அளித்த உந்தன் ஒற்றை பிடி சோற்றுக்காக
இப்போது ஏங்குகிறேன் அம்மா..!!
  
அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்
வரண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய் தடவி விடும் எண்ணெய் துளிகள்
வேண்டா வெறுப்பாய் நிற்கும் நான்..!!
இன்றும்,
என் தலை முடி சகாராதான் அம்மா...
உந்தன் கை ஒற்றை எண்ணெய் துளிக்காக ஏங்கி நிற்கிறது..!! ஆசையால்..

மழையில் நனைந்து வர முனுமுனுத்தபடி துடைப்பாய்
உந்தன் முந்தானையில் இப்போது நனைகிறேன்
ஆசையால் அல்ல, ஏக்கத்தால்..,
  
அத்தி பூக்கும் தருணமாய்..!
என்றாவது ஒருநாள் என்னை திட்டும் நீ..!
அந்த நொடியில் எதிர்த்து பேசினேனே அம்மா..!!
இன்றோ..
இங்கே உயர் அதிகாரி திட்ட
சுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே அம்மா..!!

என்னை மன்னித்துவிடேன் அம்மா..!!

தொலைபேசியில்... உனக்காக, தேடி திரிந்து பார்த்து,
பார்த்து வாங்கிய புடைவையை பற்றி சொல்வதற்கு முன்
உன் வார்த்தைகள் வருமே..!
கண்ணு உனக்காக ஒரு சட்டை வாங்கிருக்கேன்
வரும்போது எடுத்துகிட்டு போடா என்று..!!

எப்படி அம்மா சொல்வேன் எந்தன்
அன்பையும், எண்ணத்தையும்..

என் ஏக்கங்களை சொல்ல துடிக்க... கைபேசியை எடுத்து,
அம்மா.... என்று சொல்லும் நொடிகனத்தில் மாறுகின்றது
எந்தன் வார்த்தைகள்.,

நான் இங்கு நலமாய் இருக்கேன்..! நீ எப்படியம்மா இருக்க..!!!
என் அன்னை ஆயிற்றே... எந்தன் ஒற்றை வார்த்தையில் புரிந்து கொள்வாய் எந்தன் மனதை..!!

நான் சொல்ல மறந்த வார்த்தைகளை பக்குவமாய் பட்டியலிடுவாய்..,
"வேலைக்கு ஒழுங்கா சாப்டு கண்ணு"
"மறக்காம எண்ண தேச்சி குளிடா"
"ரோட்ல பத்திரமா பாத்து போடா"
"உடம்ப பாத்துக்கோடா தங்கம்"

என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்
என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே அம்மா..!!

 உன்னை என்னிடம் இருந்து பிரித்த இந்த வாழ்க்கையை திட்டுவதா..?
இல்லை,
உந்தன் மேல் நான் வைத்திருக்கும் பாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.?
தெரியவில்லையே அம்மா..!!

உனக்காக உயிரற்ற பொருட்களால்
அன்பு சின்னம் அமைத்து என்ன பயன்..!!
உதிரம் என்னும் பசை தடவி
எலும்பு என்னும் கற்கள் அடுக்கி உன் அன்பின் சின்னமாய் இருப்பேன்
அம்மா என்றும் உந்தன் காலடியில்...!

வாழும்போதே வரலாறு - திம்மக்கா...

கர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் இருந்து தும்கூர் போகும் வழியில் 25 வது கிலோமீட்டரில் வருகிறது கூதூர் கிராமம். அதுவரை வறண்டு வெப்பமாகக் காணப்பட்ட பூமி குளிர்ந்து காணப்படுகிறது, அதற்கு காரணமான ஆயிரத்திற்கும் அதிகமான ஆலமரங்கள் அழகு காட்டி சாலையின் இருபக்கங்களிலும் இருந்து காற்றை வீசி வரவேற்கிறது. மரங்களில் உள்ள பல்வேறுவித பறவைகள் தங்கள் மொழியால் கீதம் பாடி வரவேற்கின்றன, மொத்தத்தில் மரங்கள் அடர்ந்த அந்த திடீர் சோலைவனம் மனதை சிக்கென பறிக்கிறது.

எங்கும் இல்லாத அளவிற்கு, எங்கு இருந்து வந்தன இத்தனை ஆலமரங்கள், யார் கொண்டுவந்தது நட்டது, அதைவிட யார் இவ்வளவு சிரத்தை எடுத்து பராமரித்தது என்ற பல கேள்விக்கு எல்லாம் விடைதான், எழுதப்படிக்கத்தெரியாத திம்மக்கா.

யார் இந்த திம்மக்கா என்பதை அறிய சில வருடங்கள் பின்னோக்கி பயணிக்கவேண்டும் சாதாரண கிராமத்து ஏழைப்பெண்ணான திம்மக்கா வாக்கப்பட்ட கிராமம்தான் கூதூர். சிக்கண்ணா என்ற விவசாய தொழிலாளியின் வாழ்க்கைத் துணையான திம்மக்காவிற்கு குழந்தை பாக்கியம் இல்லாது போனது, இதை காரணமாக்காட்டி உற்றமும், சுற்றமும் கொட்டிய வார்த்தைகளால் திம்மக்கா ரொம்பவே காயப்பட்டுவிட்டார். இரவுகளை தூக்கம் இல்லாமலும், பகல்களை உணவு இல்லாமலும் கழித்தார். ஆனாலும் எதுவும் ஆறுதலாக இல்லை மேலும், மேலும் துக்கம் துரத்திட, இப்படியே பத்து வருடங்கள் ஒடிப்போனது. இப்போது 80 வயதாகும் திம்மக்காவிற்கு அப்போது வயது 28.

பெற்று வளர்த்தால்தான் பிள்ளைகளா, உயிரும், உணர்வும் உள்ள மரங்கள் பிள்ளைகள் இல்லையா, பெற்ற பிள்ளை கூட தாயை மட்டும்தான் கவனிக்கும், ஆனால் பெறாத பிள்ளைகளான மரங்கள், சுயநலமின்றி ஊரையே கவனித்துக்கொள்ளுமே என்றெல்லாம் யோசித்த திம்மக்கா மரம் நடுவது அதுவும் ஆலமரங்களை தொடர்ச்சியாக நடுவது என்று முடிவெடுத்தார்.

இவ்வளவு யோசித்த திம்மக்கா அந்த ஊரின் தண்ணீர் பஞ்சத்தை பற்றி யோசிக்க மறந்துவிட்டார், ஆனாலும் முன்வைத்து காலை பின்வைக்கப்போவது இல்லை என்ற முடிவுடன் நாலு கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று தண்ணீர் கொண்டுவந்து ஆலமரங்களுக்கு தண்ணீர் விட்டார்.

ஆரம்பத்தில் இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று கேலி செய்த கணவர் சிக்கண்ணா கூட ஆலமரசெடி இலைகளும், தலைகளும் விட்டு உருவாகி வருவதைப் பார்த்து தானும் திம்மக்காவிற்கு உதவலானார்.

வயல்காட்டில் வேலை செய்த நேரம் போக எப்போதும் ஆலமரம் நடுவது, நட்ட மரங்களை பேணி பாதுகாத்து வளர்ப்பது, வளர்ந்த மரங்களிடம் அன்பும், பாசமுமாகப் பேசுவது என்று மரங்களை தனது குழந்தைகளுக்கும் மேலாக வளர்த்தார். மரங்களை வளர்ப்பதற்காக ஊரில் நிறைய குட்டைகளை உருவாக்கினார், அதில் மழைக்காலத்தில் பெய்யும் தண்ணீரை தேக்கிவைத்து வெய்யில் காலத்தில் மரங்களுக்கு ஊற்றி பயன்படுத்தினார்.

அப்படியும் தண்ணீர் பற்றாமல் போகும்போது சிரமம் பாரமால் தலையிலும், இடுப்பிலும் குடங்களை சுமந்துகொண்டு தண்ணீர் சேகரிக்க புறப்பட்டு விடுவார். ஒரு சமயம் நாலு கிலோமீட்டர் தூரம் போய் தண்ணீர் கொண்டுவந்தவர், மரங்களுக்கு அருகில் வரும்போது கால் தடுக்கி முள்ளில் விழுந்துவிட்டார். கை, கால்களில் ரத்தம். ஒ... வென்று அழுகை. பதறி ஒடிவந்த சிக்கண்ணா, ‘என்னம்மா ரொம்ப வலிக்குதா’ என்று கேட்டபோது, "வலிக்காக அழலீங்க... கொண்டுவந்த தண்ணீர் கொட்டிப் போச்சுங்க...அதான் அழறேன்" என்று கூறியிருக்கிறார்.
இப்படியாக திம்மக்கா மரம் வளர்க்க ஆரம்பித்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. திம்மக்காவின் பேச்சுப்படி சொல்லப்போனால் அவரது மூத்த பிள்ளைக்கு இப்போது வயது 52 ஆகிறது. விளையாட்டுப்போல வளர்த்த மரங்கள் இன்று கூதூர் மக்களை குளு, குளு என வைத்தபடி திகு, திகுவென வளர்ந்து நாட்டிற்கு பயன்தரும் வகையில் வளர்ந்து நிற்கின்றது.

சுற்றுச்சுழலின் நண்பர் என்ற உயரிய விருதினை அமெரிக்கா அளித்து கவுரவித்தது வரை திம்மக்கா வாங்கியிருக்கும் விருதுகள் பலப்பல.

இன்றைய தேதிக்கு திம்மக்கா வளர்த்துள்ள மரங்களின் மதிப்பு பல கோடி ரூபாயாகும்அத்தனையும் இப்போது அரசாங்கத்தின் சொத்து. பதிலுக்கு அரசாங்கம் திம்மக்காவிற்கு மாதம் 500 ரூபாய் முதியோர் உதவித் தொகையும், வசிப்பதற்கு பெங்களுரூவில் ஒரு வீடும்வழங்கியது. என் எசமான் (சிக்கண்ணா) இறந்த பிறகு, என் பிள்ளைகள்தான் (மரங்கள்) என் உலகம். இவைளை விட்டு நான் எங்கேயும் வரலை என்று சொல்லிவிட்டு பெங்களுரூ வீட்டை திருப்பிக் கொடுத்து விட்ட திம்மக்கா கூதூரிலேயே 500 ரூபாய் ஒய்வு ஊதியத்தில் தன் ‘பிள்ளைகளுடன்’ வாழ்ந்து வருகிறார். வீட்டில் இருக்கும் நேரத்தைவிட மரங்களுடன் செலவழிக்கும் நேரமே அதிகம்.

எண்பது வயதைத் தாண்டிவிட்ட திம்மக்கா தொடர்ந்து தொலைதூரம் சென்று தண்ணீர் சுமந்துவர முடியாத சூழ்நிலையில், புதிதாக மரமேதும் வளர்க்கவில்லை, ஏற்கனவே வைத்து, வளர்த்த மரங்களை மட்டும் பாதுகாத்து வருகிறார். வளர்ந்த மரங்களும் திம்மக்கா தங்கள் பக்கம்வரும்போது குளிர்ந்த காற்றை வீசியபடியும், ‘அம்மா எங்கள விட்டு எங்கேயும் போயிடாதீங்கம்மா’ பேசியபடியும் காணப்படுகின்றன.

திம்மக்காவைப் போன்று சிலர் இருப்பதால்தான் "நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை" என வள்ளுவர் கூற முடிந்தது.

இதை படிகும் அனைவருக்கும் ஒருவித பூரிப்பு உண்டாகும் என்பதில் எந்தவித சந்தேகம் இருக்காது என்பதுதான் உண்மை. இந்த கதையை படிக்கும் அன்பர்கள் படிப்பதோடு நிறுத்திவிடாமல் தங்கள் வாழ்நாளில் ஒரு மரமாவது நடுவது தான் அந்த அம்மாவிற்கு நாம் செய்ய போகும் மரியாதையாகும்.

தாயின் காலடியில் தான் சுவர்க்கம் இருக்கிறதென்று இறைவன் சொல்லி இருக்கின்றான். இந்த தாயின் காலடி பட்ட இந்த கிராமமே ஒரு சுவர்க்கம் தான்.

தெய்வம் கோவிலில் மட்டும் அல்ல... மக்களோடும் இருக்கிறார்...

பட்டாசாகிய நான் உருவாகும் கதை

டமால், டுமீல் என காதை கிழிக்கும் ஒசை என்றாலும் சரி, சத்தமில்லாமல் வானத்தில் பூப்பூவாய் வர்ணஜாலம் காட்டுவதானாலும் சரி. மற்றவர்களை மகிழ்விப்பதில் என்னை மிஞ்ச யாராலும் முடியாது. பட்டாசாகிய நான் உருவாகும் கதையைக் கேட்டால் கல்நெஞ்சக்காரர்களின் கண்களும் கலங்கும். பலரது கைகளில் பலவிதமாய் உருவாகும் என் வளர்ச்சியின் பின்னால் பல தொழிலாளர்களின் வாழ்க்கை உள்ளது.

குட்டி ஜப்பான் சிவகாசி

அச்சுத் தொழிலும், தீப்பெட்டித் தொழிலும் நிறைந்துள்ள குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியை சுற்றித்தான் நான் உருவாகும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. அந்த மண்ணும், அங்கு நிலவும் சீதோஷ்ண நிலையும் எனக்கான இடமாகிப் போனதால் நான் குடிசைத் தொழில்போல பல்கிப் பெருகினேன். நான் சிவகாசிக்கு வந்தது தனிக் கதை.

அந்நியச் செலவாணி

இந்தியாவிலேயே முதன் முதலாக நான் மேற்கு வங்கம் மாநிலத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டேன். பல ஆண்டுகள் கழித்து சிவகாசியை சேர்ந்த தொழிலதிபர்கள் சிலர் சீனா சென்று என்னை உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்பத்தை கற்று வந்தனர். இதன் பின்னர் மளமளவென வளர்ந்து இன்றைக்கு பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கிறேன்.

ஆண்டொன்றுக்கு மூன்றாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை பெற்றுத் தருகிறேன். 1960 களில் தொடங்கிய என் பயணம் இன்று 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளாக வளர்ந்து நிற்கிறது. நாட்டிற்கு ஆண்டு தோறும் பல கோடி ரூபாய்க்கு அந்நிய செலவாணியை ஈட்டித்தருவதில் என் பங்கும் முக்கியமானது என்பதில் எனக்கு பெருமைதான்.

என்னதான் கோடிக்கணக்கான வருமானம் கிடைத்தாலும் என்னை தயாரிக்க தினந்தோறும், கந்தகத்திலும், கரிமருந்திலும், வெந்து உழலும் தொழிலாளர்கள் பலரையும் பார்த்து பார்த்து மனம் நொந்து அந்த வேதனை தாங்காமல் நானே வெடிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறேன். இதில் பலியாவது என்னவோ அப்பாவிகள்தான்.

விபத்தாக மாறிப்போன வாழ்க்கை

அடிக்கடி விபத்து ஏற்பட்டாலும் அதைப்பற்றி எல்லாம் கோடி கோடியாய் சம்பாதிக்கும் எந்த முதலாளியும் கவலைப்படுவதில்லை. தொழிலாளர்களுக்கான எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் யாரும் செய்து தருவதில்லை. உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்றாலும் காலை 8 மணிக்கு அரக்க பரக்க வீட்டில் இருந்து தொழிற்சாலைக்கு கிளம்பிவிடுகின்றனர் தொழிலாளர்கள். அடிக்கடி நடக்கும் விபத்துகளினால் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பம் கரிமருந்தில் கருகிய செடியாய் துளிர்க்காமல் அடங்கிப்போகும். ஆபத்தான தொழில் என்று அறிந்தும் தவிர்க்க முடியாமல் இதில் சிக்கித்தவிப்பவர்கள் பலர்.

என்னை நம்பி, குழாய் உருட்டுதல், திரிசெய்தல், மருந்து அடைத்தல் என கிராமங்களில் சார்புத் தொழில் செய்பவர்கள் லட்சக்கணக்கானோர் உள்ளனர். தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுவதுபோல தொழிற்சாலைகளின் நிகழும் வெடி விபத்து காலங்களில் இவர்களின் வாழ்க்கைதான் முடங்கிப்போகும்.

சந்தோசமாய் வெடிப்பேன்

தீபாவளி மட்டும் என்றில்லை கோவில் திருவிழாவோ, தேர்தலோ எதுவென்றாலும் வெற்றியைக் கொண்டாட என்னைத்தான் கொளுத்திப் போடுகின்றனர். என் வெடிச்சத்தம்தான் பிறருக்கு கொண்டாட்டமாய் இருக்கிறது. என்னை அழித்துகொண்டு பிறரை மகிழ்விப்பதில் எனக்கு சந்தோசம்தான். ஆனால் பாடுபட்டு என்னை உருவாக்கும் கரங்களுக்கு பரிசாக நான் எதையும் தருவதில்லை என்பதை எண்ணும்போதுதான் எனக்குள் லேசாக வலிக்கிறது.பிறருடைய மனங்களில் மத்தாப்பு பூக்கவைக்க பாடுபடும் தொழிலாளர்களுக்கு என்றைக்கு பாதுகாப்பான வாழ்க்கை அமைகிறதோ அன்றைக்குத்தான் உண்மையிலேயே சந்தோச சிரிப்புடன் நான் வெடித்துச் சிதறுவேன்.

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் !!!

சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!!!

என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது... காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!

சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டுகெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!

பள்ளிக்கு செல்ல மறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனை போல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்! அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !

கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும் போது குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !

மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்... கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்... அழுவதும்... அணைப்பதும்... கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்... இடைகிள்ளி... நகை சொல்லி... அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி" இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு... எனைத் தீயில் தள்ளி வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!

கணவா - எல்லாமே கனவா?

கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?! 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்.... 4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்... 2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!!! இது வரமா...? சாபமா...?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ?
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்...
விட்டுகொடுத்து...
தொட்டு பிடித்து...
தேவை அறிந்து...
சேவை புரிந்து...உனக்காய் நான் விழித்து...
எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வார விடுமுறையில் பிரியாணி...
காசில்லா நேரத்தில் பட்டினி... இப்படிக் காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்...

இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம், உறவு, உல்லாச பயணம்... பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா!

தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா?
விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா?
பணத்தைத் தரும், பாரத வங்கி! பாசம் தருமா?

நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்,
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?

பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல், ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!

உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!

(இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ )

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பசங்க நல்ல புருஷனா இருக்காங்களாம் !!! அப்போ நீங்க??

பெண்களை பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள்:
நான்கு வருடம் பெண்களை தூரம் நின்றே ரசித்த இவர்கள். தங்களுக்கென்று கிடைத்த அழகு பதுமையை குழந்தை போல பார்த்துக் கொள்கிறார்களாம்.

மறதி இல்லாதவர்கள்:

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க ஆயிரக்கணக்கான ஃபார்முலாவினை மனம்பாடம் செய்த இவர்கள் அவ்வளவு எளிதில் முக்கியமான நாட்களை மறக்க மாட்டார்களாம். இது ஆண்களிடம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயம்.

ஏமாற்ற மாட்டார்கள்:

கல்லோரியிலும் சரி, அலுவலகத்திலும் சரி பெண்கள் பெரும்பாலும் இல்லாத சுற்றுசூழலில் வாழ்பவர்கள் என்பதால், இவர்கள் தங்களது மனைவியை ஏமாற்றமாட்டார்கள் என பெண்கள் கருதுகின்றனர்.

வியப்பூட்டும் பரிசுகள்:

கரடி பொம்மை, கிரீட்டிங் கார்டுகளுக்கு எல்லாம் டாட்டா சொல்லிவிட்டார்கள் பெண்கள். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பசங்க தரும் வியப்பூட்டும் ரோபோ பரிசுகள் தான் அவர்களை வியக்க வைக்கிறது.

கார்களில் சுற்றுப்பயணம்:

உயர்ரக கார்கள் இல்லாவிடினும், தாங்கள் வைத்திருக்கும் கார்களை சொகுசாக வடிவமைக்க தெரிந்தவர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பசங்க. பொதுவாகவே ஊர்சுற்ற பிடித்த பெண்கள் இவர்களுடன் திருமணத்திற்கு பின் இவர்களது சொகுசான கார்களில் ஊர் சுற்ற அதிகம் விரும்புகின்றனர்.

அதிக நேரம் செலவிடுவார்கள்:

ஐ.டி. வேலைகளில் லட்சங்களில் சம்பிதிப்பவர்களை விட மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பசங்க அதிக நேரம் அவரது மனைவியுடன் செலவிடுகின்றனர். இவையெல்லாம் பெண்களுக்கு பிடித்தமான விஷயங்களாக கூறப்படுகிறது.

வீட்டு வேலைகள்:

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பசங்க இருந்தால் வீட்டு வேலைகள் செய்வது சுலபம் என கருதுகின்றனர். சம்சாரத்தில் இருந்து மின்சாரம் வரை அனைத்து வீட்டு வேலைகளையும் கட்சிதமாய் செய்து முடிக்கிறார்களாம் இவர்கள்.

ஷாப்பிங் செய்யும் போது காத்திருப்பார்கள்:

மொக்கையான வகுப்புகளையே மணிக்கணக்கில் உட்கார்ந்து கவனித்த அவர்களுக்கு பொறுமை அதிகம். அதனால் ஷாப்பிங் செய்யும் போது பொறுமையாக இருப்பார்களாம்.

உடலுறவு:

கணினியில் அதிகம் வேலையில்லாத இவர்களுக்கு ஆண்மை குறைப்பாடோ, மன சோர்வோ ஏற்படுவது இல்லை என்பதால் உடலுறவில் நன்கு ஈடுப்படுவர்கள் என்பது பெண்களின் கருத்து.

கனவுகளை நிறைவேற்றுபவர்கள்:

தாங்கள் விரும்பிய படிப்பினை படித்து முடித்த அவர்களுக்கு கனவு மெய்படுவதன் உணர்வை அறிந்தவர்கள். எனவே, அவர்களது மனைவியின் கனவுகளையும் நிறைவேற்றுவார்கள்.